Tender coconut uses in tamil
Tender coconut uses in tamil
இளநீரின் பயன்கள் :-
நான் இன்றைக்கு இளநீரின் பயன்கள்(Tender coconut uses in tamil) குறித்து பின்வருமாறு பார்ப்போம் இன்றைய காலகட்டத்தில் நிறைய மக்கள் இளநீர் விரும்பி குடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் வெயில் காலங்களில் நாம் வெளியே போகும்போது இயல்பாகவே நமது உடம்பில் தாகம் ஏற்படும் அப்போது நாம் முதலில் எதிர்பார்ப்பது தாகம் தணிக்க வேண்டிய நீர் ஆதாரங்களை தான்.
இளநீர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் :-
இளநீரில் மிக அதிகமான அளவு நீர்ச்சத்து காணப்படுகிறது எனவே நாம் இளநீர் குடிப்பதால் தாகம் உடனடியாக தணிந்துவிடும் மேலும் இளநீரில் மின் அயனி காணப்படுகிறது இது நமது உடம்பிற்கு தேவையான குளுக்கோஸ் உற்பத்திக்கு துணை செய்கிறது இதனால் நமது உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது இளநீரில் இவ்வளவு தான் நன்மைகளா என்று கேட்டால் இல்லை இன்னும் ஏராளமான நன்மைகள் இளநீரில் உள்ளன அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம் பருகி வருவதால் நமது தோல் பளபளப்பாக மாறும் இளநீரில் குளுகோஸ் இருப்பதால் நாம் இயல்பாகவே புத்துணர்ச்சியாக இருப்போம் எனவே நமக்கு குறைந்த அளவு உணவு உடம்பிற்கு தேவைப்படும் அப்போது நமது உடல் எடை குறைப்பதற்கும் உதவி செய்கிறது மேலும் இளநீர் பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது எனவே நான் வெளியே போகும்போது கெமிக்கல் நிறைந்த பானங்களை குடிப்பதை விட இளநீரை குடிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்வோம் மேலும் நமது உடம்புக்கு தேவையான விட்டமின் சி அதிக அளவு பெற்றுத்தரக்கூடிய ஒரு குறிப்பை பார்ப்போம் நாம் இளநீர் வெட்டியவுடன் அந்த தண்ணீரை எடுத்து டம்ளரில் ஊற்றி வைக்கவும் பின்பு ஒரு எலுமிச்சையை எடுத்து அதை வெட்டி பாதி எலுமிச்சையை பிளிந்து இளநீர் சேர்க்கவும் பின்பு நான் கலக்கி குடித்து விடலாம் இவ்வாறு குடிப்பதால் நமது உடம்புக்கு தேவையான vitamin c நாம் அதிக அளவு பெற்றுக்கொள்ளலாம் இதை பயன்படுத்தி அனைவரும் பயன்பெறுங்கள் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக