Bad breath Home remedies:-

Bad breath Home remedies
வாய் நாற்றம்(Bad Breath):-
மக்கள் நம் பக்கம் வந்து பேசவே தயங்கும் ஒரு விஷயம் என்னவென்றால் நமக்கு இருக்கும் வாய் துர்நாற்றம். பொதுவாக வாய் துர்நாற்றம் இருக்கும் நபரிடம் மக்கள் நெருங்கி பேச தயங்குவார்கள். இது அவர்களை மனரீதியாக வெகுவாக பாதிக்கும். இப்போது நாம் இதிலிருந்து விடுபட எளிமையான வீட்டு மருத்துவத்தை(cure bad breath remedies in tamil) பார்ப்போம்.
பல் துலக்குதல்:-
உப்பு:-
வாய் துர்நாற்றத்தை மாற்றுவதற்கான வீட்டு மருத்துவத்தில் உப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பை கலந்து நன்றாக வாயைக் கொப்பளித்தால், நம் வாயில் இருக்கும் பாக்டீரியா கிருமிகள் அழியும். நம் பல்லும் பலமடையும் மேலும் வாய் துர்நாற்றம் ஓரளவு கட்டுக்குள் வரும்.
புதினா இலை:-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று புதினா இலை. இதை நாம் வாசனைக்காக நாம் உணவுகளில் சேர்க்கிறோம். இந்த புதினாவை வைத்து வாய் துர்நாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம் நாம் இரவு உணவு சாப்பிட்ட பின்பு புதினா இலையை தேவையான அளவு எடுத்து மென்று சாப்பிட்டால். நமது வயிற்றில் இருக்கும் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்து நமது வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
வெந்தய விதை தேநீர்:-
வாய் துர்நாற்றத்திற்கு மற்றும் ஒரு தீர்வு வெந்தய விதை. நாம் வெந்தய விதை தேநீரை உட்கொள்வதாலும் வாய் துர்நாற்றம் கட்டுக்குள் வரும். நாம் வெந்தய விதையை அல்லது பொடியை சிறிதளவு எடுத்து நீரில் காய்ச்சி அந்த கலவையை நாம் குடித்தோம் என்றால் நமக்கு வயிற்று கோளாறுகள் மாறி நல்ல செரிமானமும் வாய் துர்நாற்றம் மாறுவதை காணமுடியும். ஆனால் நாம் வெந்தய விதைகளை ஒரு ஸ்பூன் அளவு பயன்படுத்துவது சிறந்தது. அளவுக்கதிகமாக பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
கிராம்பு:-
நாம் பயன்படுத்தும் மற்றுமொரு சிறந்த வீட்டு மருந்து கிராம்பு. இது மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த வாய் துர்நாற்றத்திற்கான மருந்தாகும் இதை நாம் மென்று சாப்பிடுவதன் மூலம் நம் வாய் துர்நாற்றம் மாறுவதை அறியமுடியும். சிலருக்கு இதன் சுவை பிடிக்காது ஆனால் இதை ஒரு தண்டு அல்லது இரண்டு தண்டு மென்று சாப்பிடுவதன் மூலம் நம்முடைய வாயில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அனைத்தும் இறந்து விடுகின்றன. மேலும் இதில் இருக்கும் யூஜினால் எனப்படும் சேர்மம் நமக்கு ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.
ஏலக்காய்:-
வாய் துர்நாற்றத்திற்கு ஆன மற்றும் ஒரு தீர்வு(solution for bad breath) ஏலக்காய். இது நமது வீட்டு சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருளாகும். இது உணவிற்கு சுவையையும் மணத்தையும் தருகிறது. இதை நாம் தின்பதன் மூலம் நமது வயிற்றுக்கு நல்ல செரிமானத்தையும் வாய்வு தொல்லையிலிருந்து நல்ல விடுதலையும் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல இது நமது நுரையீரலுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இதை நாம் மென்று சாப்பிடுவதன் மூலம் நம்முடைய வாய் துர்நாற்றம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாக (how to cure bad breath fast) செயல்படுகிறது.
பெருஞ்சீரகம்:-
வாய் துர்நாற்றத்திற்கு மற்றும் ஒரு தேர்வு பெருஞ்சீரகம். இதை பொதுவாக உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பின்பு மென்று சாப்பிடுவதற்காக வைத்திருப்பார்கள். பெருஞ்சீரகம் இருக்கு நமது சுவாசத்தை மணமாகும் தன்மையுண்டு. நாம் பெருஞ்சீரகம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு இருக்கும் தொண்டை மற்றும் வயிற்றுப்புண்கள் மாறுகிறது. மேலும் வாயு தொல்லைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கிறது. நாம் தினமும் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சாப்பிடுவதன் மூலம் நாம் நமது வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பெருஞ்சீரகத்தை தேநீராக காய்ச்சி குடித்தாலும் சிறந்த பலன் அழைக்கிறது.
நாம் மேற்கண்ட மருத்துவத்தை பயன்படுத்தி வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி காண்போம் நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக