How to Reduce belly fat naturally home
![]() |
Reduce belly fat naturally home |
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி பெரும் பிரச்சனையாக இருப்பது தொப்பை என்னதான் அழகாக இருந்தாலும் இந்த தொப்பை அழகை கெடுத்து விடும்.இதை எப்படி ஈஸியா குறைக்கலாம் (Lose Belly Fat) என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
Simple Ways to Lose Belly Fat :-

Lemon

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி அதில் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை குறையும். இதுல இரண்டே வாரத்தில் நல்ல மாற்றம் தெரிவதை நீங்கள் கண் கூட பார்க்கலாம். லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைந்து தொப்பை குறையும். அடுத்ததா உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பின் அளவை குறைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்தது நாம் சாப்பிடுகின்ற உணவை எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால் அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால் தொப்பை வராமல் இருக்கும்.
தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சுடுதண்ணீரில் சோம்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொப்பை விரைவிலேயே குறைந்து நல்ல மாற்றத்தை கொடுக்கும். பழங்களில் சிட்ரஸ் பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள வைட்டமின் சி உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் தொப்பை குறைந்து அழகான உடலை பெற முடியும். தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். தினமும் குறைந்தது 7 or 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். இப்படி குடித்து வந்தால் உடல் வறட்சி இல்லாமல், அதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.நாம் இஞ்சியை அதிகம் சேர்த்தால் அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையது.
அதற்கடுத்து முக்கியமா எதற்கெடுத்தாலும் வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு கால்களும் வலுவாகும். அதே மாதிரி தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்தால் இரண்டு வாரம் கழித்து நல்ல மாற்றம் தெரியும். அதே மாதிரி தினமும் மூன்று கப் க்ரீன் டீ குடித்து வந்தால் தொப்பை குறையும் (Reduce belly fat naturally home). சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து பசி ஏற்பட்டால் அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
>>கொழுப்பை குறைக்க தேவையான வழிமுறைகளை தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்<<
மூலிகைகள் உட்கொள்ளுங்கள் :-
![]() |
Mint |
மூலிகைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் தொப்பை கொழுப்பை எரிக்க உதவும். சில அற்புதமான கொழுப்பு எரியும் மூலிகைகள் இங்கே உள்ளன. ஜின்ஸெங், இஞ்சி மற்றும் புதினா ஆகிய மூன்று பிரபலமானவை. இந்த மூலிகைகள் அனைத்தும் கொழுப்பை எரிக்கும். இந்த மூலிகைகளை நீங்கள் தேநீர் வடிவில் உட்கொள்ளலாம்.
நீங்கள் சிறிது வேகவைத்த தண்ணீரில் ஒரு தேநீர் தயாரித்து அவற்றில் மூலிகைகள் கலந்து விடலாம், பின்னர் அவற்றை வடிகட்டலாம். நீங்கள் ஒரு இனிப்புக்கு தேன் சேர்க்கலாம். சாப்பாட்டுக்கு முன் தேநீர் அருந்துவது நல்லது நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக