How to improve heart health quickly | heart care tips in tamil
| How to improve heart health quickly | heart care tips in tamil |
இதயம் வலிமை பெற(heart care tips in tamil) :-
மனித உடல் உறுப்புகளில் இதயம் மிக முக்கியமான ஒன்று. இது இரத்தத்தை அழுத்தி உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு செல்லும் பொறுப்பு இதயத்திற்கு உண்டு. வேகமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், அசாதாரண உணவு பழக்கம், உடற்பயிற்சி குறைப்பது போன்ற காரணங்களால் இதய நோய்கள் அதிகரிக்கிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைப்பது கடினமல்ல, நாம் அனைவரும் சரியான பழக்கங்களை பின்பற்றி செய்தாலே போதும் நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.
இதயம் ஆரோக்கியமாக இருக்க விரைவில் செய்யக்கூடிய வழிமுறைகள்இதயம் ஆரோக்கியமாக இருக்க விரைவில் செய்யக்கூடிய வழிமுறைகள்.
1. உணவில் மாற்றம் செய்வது:
உணவே மருந்து என்பார்கள் நம் முன்னோர்கள். அது போல இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுதான் மருந்தாகும். அதிக எண்ணெய், அதிக உப்பு, அதிக சர்க்கரை போன்றவைகளை அதிகமாக உட்கொண்டால் இதயம் பலவீனமாகும் வாய்ப்புகளும் உண்டு இது இதய நோய்க்கு வழி வகுக்கும்.
செய்ய வேண்டியது :
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவுகளை கொள்ள வேண்டும். காய்கறி பழங்கள் அதிகம் எடுக்கலாம் தினமும் குறைந்தது நான்கு வகை காய்கறிகளை பருகலாம். இரண்டு வகை பழங்களை உண்ணலாம் .
வேர்க்கடலை, பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள் இதயத்திற்கு நல்ல கொழுப்பை சேர்க்கிறது.
ஆலிவ் எண்ணெய் அல்லது கீரை எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
ஒமேகா -3 போன்ற சத்துக்களை கொண்ட மீன்களை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிடுவது நல்லது.
அரிசி ராகி கம்பு சோளம் போன்ற சத்தான தானிய உணவுகளை உண்ணலாம்.
உப்பின் அளவை குறைக்க வேண்டும். உப்பு ரத்த அழுத்தத்தை உயர்த்தி இதயத்துக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியது.
2. உடற்பயிற்சி& இயக்கம் :
உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி இதயத்தை சீராக வைக்கிறது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.
செய்ய வேண்டியது :
தினமும் காலையில் 30 நிமிடங்கள் ஆவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற விளையாட்டுகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம்.
யோகா மற்றும் பிரா ணாயாமம் போன்ற உடற்பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டு ஏறுதல், ஓரிடத்தில் இருந்து பிற இடத்திற்கு நடந்து செல்லுதல் தனக்குரிய வேலைகளை தாமே பார்ப்பது இது போன்ற சிறு வேலைகளை நாமே செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
3. மன அழுத்தத்தை குறைத்தல்:
மன அழுத்தம் (stress ) என்பது silent killer. உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, இதய நோய் போன்ற நோய்களை இது ஏற்படுத்துகிறது.
தினசரி தியானம் மற்றும் யோகா செய்யும் போது மனம் அமைதி பெறுகிறது.
மன அழுத்தத்திலிருந்து போக்க சிந்தனைகளை மாற்றி அமைக்கும் போதுஅழுத்தம் விடுபடுகிறது. இசை கேட்குதல்,புத்தகம் படித்தல், தோட்டப்பணி, விளையாடுவது இது போன்ற வேலைகளில் கவனத்தை செலுத்தினால் அழுத்தம் குறையும்.
தினமும் இரவு7-8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் குறைவதால் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர்களுடன் பேசி, உரையாடி மனதை மிருதுவாக வைக்க வேண்டும்.
4. புகைப்பிடிப்பு மற்றும் மதுவிலக்கு :
புகை பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என பதெரிந்தும் புகைப்பிடிப்பதை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புகைப்பிடிப்பதால் புகை சுவாசம் வழியாக நுரையீரலுக்கு சென்று நோயை ஏற்படுத்துகிறது. இதனால் இதயம், நுரையீரல் இரத்தக்குழாய் போன்ற உறுப்புகளை பெரிதும் பாதிக்கிறது.
அதிக மது அருந்துதல் :
மது அருந்துவதால் உடலை பாதிக்கிறது. மது அருந்தும் போதும் மதுவின் போதை உடல் கட்டுப்பாட்டை இழக்கிறது. இதனால் பெரிய விபத்துக்கள் கூட நேரிட கூடுகிறது. வீடுகளில் சண்டை சச்சரவு ஏற்படுகிறது. மது அருந்துவதால் வீடுகளில் நிம்மதி இழந்து விடுகிறது. மது அருந்தும் போது உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட தூண்டுகிறது.
தீர்வுகள்
முழுமையாக புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
மது அருந்துவோர் மிகக் குறைவாகவும் போதை அடிமையாகாமலும் மருத்துவர் பரிந்துரையை கேட்டு அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. உடல் எடையை கட்டுப்படுத்துதல்:
அதிக உடல் எடை உடம்பில் நோய் ஏற்படுத்த முக்கிய காரணமாக உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால் நடப்பதற்கு கூட சிரமம் அடைகிறார்கள். இது இதயத்திற்கு கூடுதல் வலியை கொடுக்கும். வயிற்றுப் பகுதிகளில் கொழுப்பு அதிகரித்தால் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
செய்ய வேண்டியது :
உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்.
உணவை அளவுக்கு மிஞ்சி சாப்பிடாமல் சிறிது குறைவாக உடலுக்கு ஏற்றவாறு சாப்பிடுவது நல்லது.
உடற்பயிற்சி செய்வதால் உடம்பில் உள்ள கலோரிகள் குறைந்து உடல் எடையை குறைக்கிறது.
மனிதர்கள் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் மெட்டபோலிசம் சீராக செயல்படுகிறது.
6. பரிசோதனை செய்வது:
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு நோய் இல்லாமல் வைப்பதற்கு உடல் பரிசோதனைகள் அவசியமாக செய்ய வேண்டும். உடல் பரிசோதனை செய்யாமல் இருப்பதால் பலர் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு பிரச்சனைகளுடன் வாழ்கிறார்கள் இதனால் பிற்காலங்களில் நோய்கள் தீவிரமடைந்து உயிர் இழப்பதற்கு கூட நேரிடுகிறது. சிறிது இடைவெளி விட்டு பரிசோதனைகள் செய்வதால் ஆரம்பத்திலேயே நோய்கள் கண்டெடுக்கப்பட்ட அதிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
செய்ய வேண்டியது :
ஆண்டர்க்கு ஒரு முறையாவது இதயம், கல்லீரல் போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டும் .
உயிர் ரத்த அழுத்தம், சக்கரை, கொலஸ்ட்ரால் போன்ற பரிசோதனைகளும் செய்ய வேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்களையும் அடிக்கடி பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது.
7. உடனடி மாற்றங்கள் இன்று முதலே தொடங்குங்கள் :
காலை எழுந்தவுடன் சிறு சூடான தண்ணீரை பருக வேண்டும் அல்லது தண்ணீருடன் சிறு எலுமிச்சை சாற்றை சேர்த்து பிழிந்து குடிக்கவும் இதனால் கொழுப்பு சிறிது சிறிதாக குறைய உதவும்.
பச்சை தேநீர் அருந்துவதால் உடலுக்கு ஆன்டி- ஆக்சிடென்ட் கிடைக்கிறது இது இதயத்தை காப்பது மட்டுமில்லாமல் உடல் மெலிவதற்கும் உதவுகிறது.
காலை எழுந்தவுடன் 30 நிமிடம் நடைபயணம் மேற்கொள்வது நல்லது இது ஆரோக்கியத்தை விரைவாக மேம்படுத்துகிறது.
தினமும் காலையில் 5 நிமிடம் சுவாச பயிற்சி மேற்கொள்வது நல்லது இது மன அமைதி மற்றும் இதயத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது.
மொபைல், டிவி, லேப்டாப் போன்ற பொழுதுபோக்கு உபயோகங்களை அவசரத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொள்வது நல்லது இதனால் மன அழுத்தம் குறைய கூடும்.
8. இயற்கை மருத்துவம்& பாரம்பரிய வழிகள்:
இதய நோய் வராமல் தடுப்பதற்கு மருத்துவமனைக்கு செல்லாமல் நாட்டு வைத்தியம் அதாவது இயற்கை முறையில் தடுப்பதற்கான வழிகள் பல உள்ளன. நம் முன்னோர்கள் இயற்கை முறையை பயன்படுத்தி நோயில்லாமலும், அதிக ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்தனர். இன்றைய காலங்களில் நோயில்லாமலும், ஆரோக்கியம் குறைவாகவும் வாழ்கின்றனர்.
வெந்தயம்: இது உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்துகிறது.
பூண்டு: உடம்பில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் : இது அழற்சியை குறைக்கும். இது உடல் ஏற்படும் காயங்களின் விஷத்தன்மையை முறியடிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.
சுக்கு, மிளகு,தேன் கசாயம் : இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இருமல், சளி தொந்தரவு, தொண்டை கரகரப்பு போன்ற நோய் போக்க உதவுகிறது.
9 தொழில்நுட்பத்தின் உதவி:
இன்றைய காலங்களில் தொழில்நுட்பம் மிகவும் உயர்ந்து வருகிறது. இது உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் கண்டு பிடிப்பதற்கு உதவுகிறது இதனால் பல நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்தப்படுகிறது.
ஸ்மார்ட் வாட்ச்/ பிட்னெஸ் பேண்ட் - இது இதயத்தின் அளவு,அதன் செயல்பாடு, செயல்படும் விதம் ஆகியவற்றை கண்டுபிடிக்க உதவுகிறது.
மொபைல் ஆப்ஸ் : இது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றில் அளவுகளை கண்டறிய உதவுகிறது.
வீடுகளில் வீடுகளில் BP மானிட்டர், சுகர் டெஸ்ட் கிட் போன்றவை வைத்திருப்பது நல்லது.
10. முடிவுரை:
இதயத்தை காப்பதற்கு விலை உயர்ந்த மருந்துகள் தேவை இல்லை. நமது உடலில் சிறு மாற்றங்களை செய்தாலே போதும். நல்ல உணவு, உடற்பயிற்சி, புகை மற்றும் போதை பொருட்களுக்கு அடிமை ஆவது, மன அமைதி, சீரான பரிசோதனை இவைகளை சரியாக செய்தாலே போதும் உடல் ஆரோக்கியமாகவும் நோயில்லாமல் வாழலாம்.
நம் இதயம் நம் வாழ்வின் இயந்திரம். அதை ஆரோக்கியமாக வைத்தால் வாழ்நாள் முழுவதும் சக்தி, உற்சாகம்,மகிழ்ச்சி போன்றவை நம் வாழ்விற்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக