Breaking

Post Top Ad

புதன், 17 ஜூலை, 2024

 
benefits of brazil nuts

பிரேசில் நட்ஸ்

 சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுப்பதால் உடல் ஆரோக்கியமாகவும் நோய் இல்லாமலும் இருக்கலாம். அப்படிப்பட்ட உணவுகளில் நட்ஸ் வகைகளும் ஒன்று. இந்த  வகைகளில் பிரேசில் நட்ஸ் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக உள்ளது நட்ஸ் வகைகளில் பிரேசில் கொட்டைகள் ஒரு புதையல் என்றே கூறலாம் இதில் வெண்ணெய்  தன்மைகள் அதிகமாக இருப்பதால் சாப்பிடுவதற்கு சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் உள்ளது பிரேசில் கொட்டைகள் உணவில் சேர்த்து சாப்பிடும் போது அதிக நன்மைகளை தருவது  மட்டுமல்லாமல் உணவின் சுவையை மேலும் கூட்டுகிறது.

பிரேசில் நட்ஸ் (Brazil Nuts) என்றால்  என்ன?

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான்  காடுகளை பிறப்பிடமாகக் கொண்டுள்ளது. பிரேசில்நட்  மரத்தின் விதைகளை பிரேசில் நட்ஸ் எனக் சொல்கிறோம். இம்மரங்கள் மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் இதுவும் ஒன்று இது சுமார் 50 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இவற்றின் விதைகள் கடினமான ஓடுகளை கொண்டுள்ளது. விதைகளை சாப்பிடுவதற்கு சிறிது இனிப்பாகவும் 

இதை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நன்றாகவும் இருக்கும்.

ஊட்டச்சத்துக்கான பிரேசில் நட்ஸின் நன்மைகள்

 1. செலினியம் அதிகம் 

 பிரேசில் விதைகளில் செலினியத்தின் அளவு அதிகமாக  இருப்பதால் இவற்றின் நன்மைகள் பெரிது. இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது தைராய்டு செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி, ஆக்சிஜனேற்றம் அனைத்திற்கும் செலினியம் அத்தியாவசிய கனிமம் முக்கியதாக உள்ளது பிரேசில் விதைகளில் செலினியம் சிறந்த உணவுக்கு ஆதாரமாகும் அதிக சத்துக்கள் நிறைந்த வைட்டமின்.தினமும் ஒரு விதை மட்டுமே எடுப்பது நல்லது.

 2. இதய ஆரோக்கியம் 

பிரேசில் விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களான மோனோ, பாலி அன்சாச்ரேட் கொழுப்பை உறிஞ்சு இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பை அதிக ப்படுத்துவதன் மூலம் நன்மை  பயக்கும்கொழுப்புகள் இதய நோய்க்கான அபாயத்திலிருந்து குறைக்கிறது. விதைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய அடங்கி உள்ளது இது உடம்பில் உள்ள ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

  3. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பண்புகள்

 வைட்டமின் ஈ யும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது பிரேசில் விதைகள். ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலின் போராட்டத்தைப் போக்க உதவுகிறது. அவை உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் பிரேசில் விதைகள் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. பிரேசில் விதைகளை தினமும் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 4. மன ஆரோக்கியம் 

 பிரேசில் விதைகளில் செலினியம் நிறைந்துள்ளது. இதை மனிதனின் மூளைக்கும், தைராய்டு மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நன்மைகளை தருகிறது. அறிவியல் ஆய்வுகளில் படி செலினியத்தை சாப்பிடுவதால் அறிவை பெருக்கும். அல்சைமர் போன்ற நரம்பிய கடத்தல் நோய்களை குறைக்கிறது. இவை வைட்டமின் ஈ போன்ற நல்ல கொழுப்பைமூளைக்கு எடுத்து செல்கிறது. ஊட்டச்சத்துகள் பிரேசில் விதைகளில் காணப்படுகின்றன.

 5. குறைக்கப்பட்ட அழற்சி தாக்கம் 

 பிரேசில் விதைகள் அதிக சத்துக்கள் நிறைந்தவை இதில் ஊட்டச்சத்துக்களான எலாஜிக்கு அமிலம் மற்றும் செலினியம்  ஆகியவை வளர்ச்சி நோயை போக்குகிறது உடலில் உள்ள அழற்சியை குறைத்து ஆற்றலை தருகிறது. நோய்களினால் ஏற்படும் கீழ்வாதம் அழற்சி போன்றவைகளுக்கு நன்மை தருகிறது 

பிரேசில் நட்ஸ் உங்கள் உணவில் சேர்ப்பது எப்படி?

  காலை உணவில் பிரேசில் விதைகளை நன்றாக நறுக்கி பொடி சேர்த்து சமைத்தால் காலை உணவு சத்தான உணவாக மாறுகிறது அது உண்பதற்கு சுவையாகவும் இருக்கிறது.

 பிஸ்கட், பிரவுனிகள் மற்றும் தயாரிக்கும் போது நறுக்கப்பட்ட பிரேசில் விதைகளை அதில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதில் மிகக் கூடுதலான ஊட்டச்சத்துகளையும் தருகிறது.

பிரேசில் விதைகளை பல முறைகளில்சமைத்து சாப்பிடலாம். அதனை அவித்தோ,வறுத்து அல்லது பொரித்து சாப்பிடலாம்.

 பசுமையான பச்சையாய் சாலடுகள் அல்லது பழ சாலட்களில் பிரேசில்விதைகளை நன்றாக நறுக்கி அதில் சேர்த்து சாப்பிட்டால்  அது ஊட்டச்சத்து மற்றும் உடலுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.


சாத்தியமான சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

 பிரேசில் கொட்டைகள் மிகவும் ஊட்டச்சத்து அடர்த்தியானவை, ஆனால் நீங்கள் அவற்றை அரிதாக மட்டுமே சாப்பிட வேண்டும். அதன் அதிக செலினியம் உள்ளடக்கம் காரணமாக, அதிகப்படியான உட்கொள்ளல் செலினியம் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும், இது மூளை குறைபாடு, இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் முடி உதிர்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். பிரேசில் கொட்டைகளை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

கீழ்கண்ட ஆராய்ச்சிகள்

 பிரேசில் விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை கண்டறிய மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சர்க்கரை அளவுக்கான பயன்பாடு, ஹார்மோன் சமநிலை போன்றவற்றை பற்றிய ஆராய்ச்சிகளும் இதில் உள்ளடங்குகிறது.

பூஞ்சை மற்றும் பூச்சி சோதனைகள்

 பிரேசில்விதைகள் வில்வள்ளி மரங்கள். பூஞ்சை மற்றும் பூச்சிகளை எதிர்த்து வளர்வதால் பிரேசில் நட் நுண்ணுயிரியல் பாதுகாப்புடன் வளர்கிறது.

குறிப்புகள்

பிரேசில்விதைகளை விற்கும் போது அவற்றின் பயன்பாடுகள், விலை, தாதுக்களின் அளவு,பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவற்றை செயல்படுத்துகின்றனர். 

முடிவுரை

பிரேசில் விதைகள் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். இதிலுள்ள செலினியம் மற்றும் தாது பொருட்கள் உடல்நலத்திற்கு முக்கியமானதாக உள்ளது. அதனை அளவு மிஞ்சாமல் சாப்பிட வேண்டும்.

 நாம் அறிந்த தகவல்கள் இவை அனைத்தும்.மேலும் விவரங்களை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

பக்கங்கள்