கருஞ்சீரகம் நன்மைகள் (Homemade medicine inside)
![]() |
Karunjeeragam benefits in tamil |
கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரிந்த உண்மை தான். கருஞ்சீரகம் சில முக்கிய நோய்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை பின்வருமாறு பாருங்கள்.
கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களை கொண்டுள்ளது. இந்த சத்துக்கள் கொண்டிருப்பதால் எலும்புகள் உறுதியடையும் வாய்ப்புண்டு. மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணை புரியும், மலச்சிக்கல் மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும். மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் கம்மியாக இருந்தால் அதையும் சரி செய்யும்.
சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது :-
கருஞ்சீரகம் வயிற்றில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமித்தொற்று களையும் போக்கும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள கற்களைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுவதில் திறன் பெற்றுள்ளது. கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மூன்று நாட்களில் வெளியேறிவிடும்.
கொழுப்பை கரைக்கிறது :-
கருஞ்சீரகம் பித்தப்பைக் கற்களைக் கரைத்து வெளியேற்றும். இதனால் உடல் உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும். கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கின்றது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் நலத்தை பாதுகாக்கிறது.
விஷக்கடியை குணப்படுத்துகிறது :-
முக்கியமாக கருஞ்சீரகம் அனைத்து விதமான விஷக்கடிகளையும் குணப்படுத்துகிறது தேள், பூரான், குளவி, தேனீ, நட்டுவாக்கிளி போன்ற விஷ ஜந்துக்களின் விஷத்தை முறிக்கிறது. கருஞ்சீரகத்தை நான்கு கிராம் அளவு எடுத்து நீராகாரம் அல்லது வெந்நீரில் கலந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் விஷப் பூச்சிக் கடி ஆக இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.
தலை வலிக்கு சிறந்தது :-
கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலை வலிக்கும், மூட்டு வீக்கத்திற்கு மேல் பூச புண்கள் சரியாகும். இந்தப் பொடியைத் தேன்விட்டு அரைத்து பூச குழந்தைப் பேறுக்குப் பிறகு பெண்களுக்கு வருகின்ற வலி குணமாகும். கருஞ்சீரகப் பொடியை ஒரு கிராம் அளவு எடுத்து தேன் கூட சேர்த்தோ இல்லைனா நீர் சேர்த்து கலந்து கொடுத்தால் மூச்சு முட்டல் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தோல் நோய்க்கு சிறந்தது :-
கருஞ்சீரகப் பொடியை தினமும் குளிக்கும் போது உடலில் தேய்த்துக் குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தும் நீங்கும். மேலும் தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள் தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும். ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கருஞ்சீரகப் பொடியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் ஏற்படாமல் காக்கும். எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும். கருஞ்சீரக எண்ணையை தேங்காய் எண்ணெயோட குறைந்த தீயில் காய்ச்சி அதை ஆறவைத்து வாரம் மூன்று நாட்கள் இந்த எண்ணையை தலையில் அரை மணி நேரம் ஊற விட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை குறைக்கலாம் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக