Breaking

Post Top Ad

சனி, 9 ஜனவரி, 2021

 

கொழுப்புக்கான வீட்டு வைத்தியம் 

தமிழில்


Home Remedies For Cholesterol in tamil
Home Remedies For Cholesterol in tamil

மனிதர்களாகிய நமக்கு இருக்கிற பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இந்த கொழுப்பு(cholesterol). இருப்பினும் கொழுப்பு(cholesterol) மனித உடம்புக்கு முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே நாம் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. கொழுப்பு(cholesterol) நம் உடம்பில் எப்படி இருக்குமென்றால் மஞ்சள் நிறம் கொண்ட திடப்பொருளாக இருக்கும். இது இயற்கையாக கல்லீரலில் அல்லது குடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. நமது வீட்டில் நாம் இயற்கையாக பயன்படுத்தும்  பொருள்களை கொண்டு(Home Remedies For Cholesterol) கொழுப்பை கரைக்கும்  முறையை பற்றி பின்வருமாறு காண்போம்.


  1. பூண்டு(Garlic)

  2. இஞ்சி(Ginger)

  3. பச்சை தேயிலை தேநீர்(Green Tea)

  4. சிக்கரி, இஞ்சி மற்றும் வெந்தயம்(Chicory, Ginger and Fenugreek Seeds)

  5. ஓட்ஸ்(Oats)

  6. அரிசி கிளை எண்ணெய்(Rice Bran Oil)

  7. கொத்தமல்லி(Coriander)


1. பூண்டு(Garlic):


Garlic


 பூண்டு இதன் அறிவியல் பெயர் அல்லியம் சாடிவம். பூண்டு தனித்துவமான வாசனையுடன் பல நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. மேலும் சமையலில் சுவையூட்டி ஆகவும் இருக்கிறது. இதன் முக்கிய பண்பு என்னவென்றால் இதில் அல்லிசின் என்னும் வேதிப்பொருள் காணப்படுகிறது. இது உடலில் உள்ள பாக்டீரியாவையும், புஞ்சைகளையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும் செரிமான பிரச்சனையால் அவதிபடும் அனைவருக்கும் சிறந்த நிவாரணியாக   செயல்படுகிறது. அதிக அளவு எல்.டி.எல் நோயாளிகளுக்கு பூண்டு கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூண்டை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை நமக்கு தருகின்றன. நாம் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டை அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிடும் போது நமக்கு சிறந்த பயனளிக்கிறது.  ஒவ்வாமை  இருப்பவர்களுக்கும் சுட்டு சாப்பிடும்போது சிறந்த பயனளிக்கிறது. எனவே பூண்டு கொழும்புக்கான மிகச் சிறந்த வீட்டு உணவாகும்.


2. இஞ்சி(Ginger):


Ginger


இஞ்சி பாதுகாப்பான கொழுப்பை கரைக்கும்  வீட்டு மருந்து ஆகும். இஞ்சி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. இஞ்சி கணிசமாக சீரம் மற்றும் கல்லீரலின்(serum and hepatic) கொழுப்பின் அளவை இரண்டு வழிகளில் குறைக்கிறது. ஒன்று நமது உடலின் தேவை இல்லாமல் உருவாகும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கிறது, இரண்டாவது நமது உடலில் உள்ள கொழுப்பை பித்த அமிலங்களாக(bile acids) உரு மாற்றுகிறது. நமது உடலில் செரிமான பிரச்சனை இருந்தால் இஞ்சி எடுத்துக்கொள்ளும்போது நமக்கு நிவாரணத்தை தருகிறது.  இஞ்சியை நாம் பல முறைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம் தேநீரில் இஞ்சியை பயன்படுத்தலாம் இதனால் நமக்கு சுவையையும், நன்மையையும் தரும். எனவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் இஞ்சியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.


3. பச்சை தேயிலை தேநீர்(Green Tea):


Green Tea


கிரீன் டீ இது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஒரு முறையாகும். கிரீன் டீ பல முறைகளில் நமது உடலுக்கு நன்மை தருகிறது அதில் ஒரு சில முறைகளை நாம் பார்ப்போம். இது நமது உடலில் லிப்பிட் (secretion of lipids) எனப்படும் திரவம் அதிகமாக சுரப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த நாளங்கள் சுருங்குவதை தடுக்கிறது. மேலும் க்ரீன் டீ ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்(anti-oxidant) பொருளாக இருக்கிறது இது  நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை(free radicals) தடுக்கிறது. எனவே கிரீன் டீ கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


4. சிக்கரி, இஞ்சி மற்றும் வெந்தயம்(Chicory, Ginger and Fenugreek Seeds):


Chicory


வெந்தயம் நீண்டநாளாக கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயம் எல்லாருடைய சமயலிலும் முக்கியமாக பயன்படுத்தும் பொருளாகும். வெந்தயம் பல சுத்திகரிப்பு பணியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயத்தின் கூட சில பொருட்களையும் சேர்க்கும்போது சிறந்த கொலஸ்ட்ரால் தடுப்பு  வீட்டு மருந்து  உருவாக்க முடியும். வெந்தயம் ஒரு டீஸ்பூன் மற்றும் சிக்கரி(Chicory) or எலுமிச்சை பூக்கள்(lime flowers) ஒரு டீஸ்பூன் மற்றும் இஞ்சிச் சாறு அரை டீஸ்பூன் இவை அனைத்தையும் தண்ணீரில் கலந்து வேகவைத்தது. கரைசலை வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் போது கொலஸ்ட்ரால் அளவிலிருந்து பயனுள்ள  நிவாரணத்தை தரும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் இந்த கரைசலை குடிக்கலாம். அனைவரும்  இதை பின்பற்றி பயனடைவோம்


5. ஓட்ஸ்(Oats):


Oats


கொழுப்பின் முதல் வீட்டு வைத்தியம் ஓட்ஸாக இருக்க வேண்டும்.ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் ஓட்ஸ்ல் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இது உங்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. ஓட்ஸ் உணவை அதிகமாக எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு உடல் எடை குறைவது கண்கூடாக காணமுடியும்.  எனவே ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.


6.அரிசி கிளை எண்ணெய்(Rice Bran Oil):


Rice Bran Oil


சாதாரணமாக கொழுப்பு அதிகமாக உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எண்ணெய் பொருட்கள். நாம் அதிகமாக பயன்படுத்தும் பாமாயில் போன்ற எண்ணெய் பயன்படுத்துவதால் உடம்பில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. எனவே நாம் அதற்கு பதிலாக Rice Bran Oil  பயன்படுத்தினால் ஒலிக்(Oleic), லினோலிக்(Linoleic),லெனோலெனிக் அமிலங்கள்(Lenolenic acids)

 மற்றும் பல கொழுப்பு அமிலங்களுடன் நார்ச் சத்துக்களும் நமது உடம்பில் கிடைக்கிறது.  இது நம் உடம்பிற்கு நன்மை பயக்கும் ஒரு சத்தாகும். எனவே இந்த எண்ணெயை பயன்படுத்துவது சிறந்த நன்மை தரும்.  மேலும் எள்ளில் இருந்து எடுக்கும்  எள் எண்ணெய் பயன்படுத்தினாலும் நன்மை தரும்.


7. கொத்தமல்லி(Coriander):


Coriander


கொத்தமல்லி விதை கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.   கொத்தமல்லி விதையை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் போட்டு காய வைத்து வடிகட்டி குடித்து வந்தால்,  உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து கொண்டே வரும்.  இதை மூன்று நேரம் பயன்படுத்த வேண்டும்.


குறிப்பு:

இயற்கையான உணவு நாம் பயன்படுத்தும் போது உடனடியாக பலனை பெற முடியாது. ஆனால் நாம் தொடர்ந்து உணவு முறைகளை மாற்றிக் கொண்டு வரும்போது நமக்கு நல்ல பலன் தருகிறது.எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத சிறந்த மருந்து நமது வீட்டு உணவுப் பொருட்களிலேயே((Home Remedies For Cholesterol)) பெற்றுக் கொள்ளலாம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

பக்கங்கள்