இருமல் மற்றும் சளிக்கு வீட்டு வைத்தியம்
முக்கியமாக இன்று உலகமெங்கும் மக்கள் சளி என்னும் நோயால் மிகவும் அவதிப்படுகிறார்கள் இதை மிக எளிதில்(Home remedies for cough & cold) நமது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்துவது என்பது குறித்து இந்த தரவில் தெளிவாக பார்ப்போம்.
ெசய்முறை விளக்கம் :-
நாம் முதலில் என்னென்ன பொருள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். சீரகம் அரை டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு இதை சரியான அளவு எடுத்துக் கொண்ட பிறகு நாம் இதை எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்போது அரைத்து வைத்த இஞ்சி, சீரகம், மிளகு கலவையை தண்ணீரில் போட வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். பின்பு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு தண்ணீரை 20 நிமிடம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் ஆறின பிறகு அதில் பாதி அளவு எலுமிச்சை சாறை அதில் சேர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு இரவு தூங்கச் செல்லும் முன்பு குடித்துவிட்டு படுக்கவும். காலையில் நல்லதொரு மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
இதை மிக எளிமையாக நாம் வீட்டில் செய்ய முடியும் எந்த பக்கவிளைவுகளும் நமக்கு ஏற்படாது. ஆனால் எந்த மருந்தும் தொடர்ந்து அதிக நாள் அருந்துவது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இரண்டு, மூன்று நாட்கள் அருந்தி பயன் கிடைக்கவில்லை என்றால், கட்டாயம் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். இந்த பொறுப்பு உங்களுக்கு பயனுள்ளது என்று நினைக்கிறேன் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக