நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (Immunity power increasing food) :-
![]() |
Immunity power increasing food in tamil |
நமது உடலில் நோய் எப்பொழுது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது(Immunity power increasing food) நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கிறது. மேலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோன்று பலகீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், மது புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவற்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்(Immunity power increasing food) குறித்து பார்ப்போம்.
பேரிச்சம்பழம் :-
முதலில் பேரிச்சம்பழம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன. எனவே இதைத் தேனுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சக்தி தரும், நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும். வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மேலும் பேரீச்சை சாப்பிட்டால் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்.
எலுமிச்சை :-
எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் மிக முக்கியமானது. மேலும் சளி முதல் புற்றுநோய் வரை வராமல் பாதுகாக்கும். அடிக்கடி விட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
பூண்டு :-
பூண்டு ஆயுர்வேத மருத்துவத்தில் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அலிசின் உடலுக்கு கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. மேலும் பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது. எனவே தினமும் உணவில் பூண்டு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
மஞ்சள் :-
மஞ்சள் இது ஒரு இயற்கையான ஆன்டி-பயாடிக் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் மிக முக்கியமான ஒரு பொருள். மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து காக்கும். எனவே மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முட்டை :-
முட்டை விட்டமின் டி உள்ள உணவுப் பொருள். வைட்டமின் டி அதிகம் உள்ள முட்டை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. எலும்பு உறுதித் தன்மைக்கு அவசியமாகிறது எனவே வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு முட்டை. அதிகளவில் குணங்கள் அடங்கியிருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும். அதே போன்று வேக வைத்த முட்டையில் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கும் மிகவும் நல்லது. எனவே முட்டையை அவித்து சாப்பிடுவது நல்லது
தேங்காய் :-
தேங்காய் எண்ணெயும், தேங்காயும் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டவை. இதில் உள்ள லாரிக் அமிலம் என்ற மோனோ லாரிக் என்ற வேதி பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் இது உடலில் ஏற்படும் பாதிப்பை எதிர்த்து போராடும். முக்கியமாக இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலை தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படும் அவர்கள் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் நோய்கள் எல்லாம் விலகும்.
கொய்யாப்பழம் :-
கொய்யாப்பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், பொட்டாஷியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது. பொதுவாக இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிக முக்கியம். எனவே வீட்டில் சி அதிகமுள்ள கொய்யாவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும். மேலும் இது சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும் உடல் இந்தப் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.
பொதுவாக ஒரு பழமொழி உண்டு சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது. எனவே நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்வின் வெற்றி காண முடியும். எனவே இங்கே சொன்ன இந்த ஒன்பது உணவுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக