Increase hemoglobin level naturally:
![]() | |||
Increase hemoglobin level naturally in tamil |
ஹீமோகுளோபின் என்றால் என்ன (What is hemoglobin) :-
ஹீமோகுளோபின் என்பது நுரையீரலில் இருந்து உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் பொழுது இரத்த செல்கள் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது இதைத்தான் ரத்த சோகை என்கிறோம். ஹீமோகுளோபின் அல்லது ரத்த சிவப்பு அணுக்கள் குறையும் பொழுது இரத்த சோகை ஏற்படுகிறது.இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போவது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை எப்படி நாமாகவே தெரிந்து கொள்ள முடியும், இதன் அறிகுறிகள் என்ன, இதன் விளைவுகள் என்ன, பத்தே நாளில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை எப்படி அதிகரிக்க முடியும்(How to increase hemoglobin level naturally), ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுக்கும் உணவுகள் என்ன, என்பது பற்றி மிகத் தெளிவாக பார்க்க போகிறோம்.
ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் ஏற்படும் விளைவுகள்(
Consequences of low hemoglobin) :-
நமது உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எப்பொழுதும் உடல் சோர்வாக இருக்கும் படிப்பில் கவனம் இல்லாமல் போகும் எந்த வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை ஏற்படும், எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பது, விளையாடக் கூட தோன்றாத மனநிலை, பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுதல், இன்னும் சொல்லப்போனால் ரத்தசோகை தொடர்ந்து கவனிக்காமல் விட்டு விட்டால் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தும், என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். எனவே ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம் .
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை நமது உடம்பு காட்டும் அறிகுறிகள்(how to find low hemoglobin level naturally) :-
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அவற்றை நமது உ டலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் உடலில் போதுமான ரத்தம் இல்லை என்பதை அவர்களின் விரல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எப்படி என்றால் விரல்களை அழுத்தும் போது இரத்தமானது விரல்களுக்கு வரும். ஆனால் இரத்த சோகை உள்ளவர்களின் விரலை அழுத்தினால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வெள்ளையாகவே இருக்கும். அதே போன்று நகமும் அடிக்கடி எளிதில் உடைந்து கொண்டே இருந்தால் ரத்தசோகை ஒரு காரணமாக இருக்கலாம். அதே போன்று கண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் அதாவது கண்ணின் கீழ் இமையை கீழ்நோக்கி இழுக்கும் பொழுது அடியிலுள்ள பகுதியானது நிறத்தில் இல்லாமல் நிறமற்று காணப்பட்டால் ரத்தசோகை என்று தெரிந்து கொள்ளலாம். நாக்கும் வெளிறிப் போய் காணப்படும். அடுத்து இரத்தசோகை இருந்தால் சரியாக சுவாசிக்க முடியாது. மேலும் மூச்சு திணறல் மற்றும் குறைவான ஆக்ஸிஜன் இதயத்திற்கு கிடைப்பதால் இதயம் எப்போதும் படபடப்புடன் இருக்கும். சொல்லப்போனால் அப்போது இதயத் துடிப்பானது அதிகளவில் இருக்கும் அதே போன்று அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால் இதயத்தில் மட்டும் தான் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம் உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால் இதயம் சற்று கடினமாகவும் அதிகமாகும் வேலை செய்ய வேண்டி இருப்பதால் அதனாலும் நெஞ்சு வலியை உணரக்கூடும். அடுத்து உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டமானது குறைவாக இருப்பதால் ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் முடி கொட்ட ஆரம்பிக்கும். அடுத்து தலைவலி உடலில் இரத்தமானது குறைவாக மூளைக்குத் தேவையான இரத்தம் செல்லாமல் தலைவலியை உண்டாக்கும். மேலும் தொடர்ந்து சோர்வாக மந்தமாக இருந்தால் உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளது என்று அர்த்தம். அதேபோன்று ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும். முக்கியமாக சருமம் மஞ்சள் நிறம் கலந்த ஒருவித வெள்ளை நிறத்துடன் காணப்பட்டால் அனிமியா என்பது அர்த்தம். மேலும் கைகால் முகம் வீங்கியும் காணப்படும்.
>>இதயத்தை பாதுகாக்க தேவையான வழிமுறைகளை தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்<<
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்(Foods that increase hemoglobin) :-
பொதுவாக நமது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டும் என்றால் இரும்பு சத்து உணவுகளை மட்டும் சாப்பிட்டால் போதாது அவை உடலில் சீராக உறிஞ்சப்பட வேண்டும். அதாவது நாம் தினமும் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை எப்படி உடல் உறிஞ்சிக் கொள்கிறது என்பது முக்கியம். அந்த வகையில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி டீசல் போன்ற உணவுப் பொருட்களின் துணையும் அவசியம். அந்த வகையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் பற்றி இப்பொழுது பார்ப்போம். முதலில் இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து தினமும் மூன்று வேளையும் இரண்டு அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், அதே போன்று வாரத்தில் மூன்று நாட்கள் முருங்கைக்கீரையை சூப் போன்ற பொரியல் போன்று பருப்பு சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதே போன்று முட்டையின் மஞ்சள் கருவில் அதிக விட்டமின் டி உள்ளது. எனவே ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரை பொரியல் செய்யும் பொழுது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை உடனே நீங்கும். அடுத்து மிக முக்கியமானது கருப்பு உலர்ந்த திராட்சை மற்றும் இரும்பு சத்து நிறைந்த இந்த உலர் திராட்சை புதிய ரத்தம் உருவாக உதவி செய்யும். எனவே தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பத்து உலர் திராட்சை கழுவி சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பத்தே நாட்களில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்கூடாக காணமுடியும். அடுத்து தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து கிடைத்துவிடும். அடுத்து பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை விரைவாக அதிகரிக்கும் உணவு. இது இதில் இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை பீட்ரூட்டில் பலமாக உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரத்தில் மூன்று முறை ஜூஸ் போன்று செய்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு உடனே அதிகரிக்கும். எனவே விட்டமின் சி அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா ஆகியவற்றை போலிக் அமிலம் நிறைந்துள்ளது இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே போன்று போலிக் அமிலம் அதிகம் உள்ள நிலக்கடலையை ஒரு கைப்பிடி அளவு தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஹீமோகுளோபினை தடுக்கும் உணவுகள்(Foods that inhibit hemoglobin) :-
இரும்பு சத்து உறிஞ்சுவதை தடுக்கும் உணவுகளான காப்பி டீ கார்பனேட்டட் பானங்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது காபியில் இருக்கும் காபின் இரும்புச்சத்து உடலில் சேர்வதை தடுக்கும். அதேபோன்று டீயில் உள்ள டானின் இரும்பு சத்து உடலில் சேராமல் தட்டிவிடும். எனவே சாப்பிட்ட உடனேயே அல்லது ஒரு மணி நேரத்திற்குள் காபி டீ குடிக்கக் கூடாது. அதே போன்று இந்த உணவுகளோடு உடற்பயிற்சி சேர்த்து செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமில்லாமல் உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக சீராக உடற்பயிற்சியோடு இங்கே சொன்ன உணவுகளையும் தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் சாப்பிட்டு பாருங்கள் 10 நாட்களில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதை கண்டு நீங்களும் வியந்து போவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக