செரிமானத்தின் போது நமது உடம்பு சில மாவுச்சத்துக்கள்(starches) மற்றும் சர்க்கரைகளை(sugar) முழுமையடையாமல் உறிஞ்சுவதால் அதிக வாயு ஏற்படுகிறது. பாக்டீரியா
உங்கள் குடலில் சர்க்கரைகளை நொதித்து, வாயுவை உருவாக்குகிறது. அதிகப்படியாக உருவாகும் வாயுவைத் தடுக்கும் முறைகளைப் பார்ப்போம் (How to Reduce excess gas):
வாயு உணவுகள் சாப்பிடுவதை குறைத்தல்
வாயுவை எதிற்கும் உணவுகளை சாப்பிடுதல்
கொழுப்பு உணவுகள் உண்பதை குறைத்தல்
வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்த்தல்
லாக்டோஸ் இல்லாத உணவுகளை பயன்படுத்துதல்
1. வாயு உணவுகள் சாப்பிடுவதை குறைத்தல்:
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வாயுவை ஏற்படுத்தும் உணவுகள் அடங்கியுள்ளன. அதில் முக்கியமான சில உணவுகளை பார்ப்போம். பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள், கோதுமை
மற்றும் கோதுமை தவிடு, முட்டைக்கோஸ், வெங்காயம், பிரஸ்ஸல்ஸ் முளைகள், சார்க்ராட்,
பாதாமி, வாழைப்பழங்கள் மற்றும் கொடிமுந்திரி. மேலும் பால் மற்றும் பிற பால் பொருட்கள் வாயுவை ஏற்படுகின்றன. பாலில் உள்ள லாக்டோஸ்(lactose) எனப்படும் வேதிப்பொருளை ஜீரணிக்க வைக்கவேண்டிய நொதி சரியாக செயல்படவில்லை எனில் அது அதிகப்படியான வாயுவை உருவாக்குகிறது எனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் அதிகப்படியான பால் உணவுகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
2. வாயுவை எதிற்கும் உணவுகளை சாப்பிடுதல்:
பீனோ என்ற உணவு நொதி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து கூட நாம் வாயுவை தடுக்க முடியும். அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம். நாம் தினமும் இரவில் தூங்கும் முன்பு தீயில் சுட்ட பூண்டை சாப்பிட்டு தூங்கினால் அதிகபடியான வாயு நீங்கும். மேலும் பெருஞ்சீரகம், பட்டை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, மஞ்சள் போன்ற பொருள்களை நாம் தினசரி பயன்படுத்தி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட முடியும்.
3. கொழுப்பு உணவுகள் உண்பதை குறைத்தல்:
கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், வறுத்த உணவுகள், கிரீம் சாஸ்கள் மற்றும் கிரேவி ஆகியவை வாயு பிரச்சினையை அதிகரிக்கும். மேலும் இவ்வகையான உணவுகள் உடல் எடையையும் மிக அதிகமாக உயர்த்தக் கூடியது. எனவே கொழுப்பு நிறைந்த உணவை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
4. வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்த்தல்:
பல ஆரோக்கியமான மக்கள் சோர்பிடால் மற்றும் மன்னிடோல் (sorbitol and mannitol) வேதிப்பொருள் உள்ள வெள்ளை சர்க்கரை உணவுகளை உண்கிறார்கள். வெள்ளை சர்க்கரை உடம்புக்கு பலவிதமான கேடுகளை விளைவிக்கக் கூடியது.
இதை நாம் அதிகமாக பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு(diarrhea) ஏற்படலாம். எனவே நாம் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
5. லாக்டோஸ்(lactose) இல்லாத உணவுகளை பயன்படுத்துதல்:
நாம் அனைவரும் பால் உணவுகள் அதிகமாக சாப்பிடுபவர்கள். நமக்கு அனைவருக்கும் தெரியும் பாலில் லாக்டோஸ்(lactose) எனும் வேதிப்பொருள் உள்ளது. சில மக்களுடைய உடலில் லாக்டோஸ்(lactose) ஜீரணிக்க வைக்க வேண்டிய நொதி சரியாக செயல்படவில்லை எனில் அது அதிகப்படியான வாயுவை உருவாக்குகிறது எனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் அதிகப்படியான பால் உணவுகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக